கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார்.

அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செயின் பறிக்க முயன்றவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.