
மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் 27 சுயநிதி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலிருந்து வேறுபட்டவை ஆகும். அதோடு இந்த பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட கல்விப் பகுதியில் அதன் உயர் தரத்தின் காரணமாக மத்திய அரசிடம் இருந்து பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் நிறுவனங்களாகும். மேலும் இந்த பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் சேர சிரமம் ஏற்படுவதால் அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.