கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி நேதாஜி நகரச் சேர்ந்தவர் சாரதி(57). இவர் ராயக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி சோர்வாக வீட்டுக்கு வந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளிடம் கேட்டபோது தலைமை ஆசிரியர் சாரதி தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் தான் வலியில் அலறியதால் தலைமை ஆசிரியர் அடித்து மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சாரதியை கைது செய்தனர்.