2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் ருத்ரதாண்டவம் இப்போதுதான் கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிக்கு இணையான அந்த முக்கியமான போட்டியில், சஞ்சு அடித்த 97* (50 பந்துகள்) ரன்கள் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஈடன் கார்டனில் நடந்த அந்தப் பரபரப்பான ஆட்டத்தில், 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்தியா, சஞ்சுவின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Kapil Dev on Sanju Samson: “It’s About the Team, Not Just One Individual”#KapilDev #PGTI #GolfIndia #72TheLeague #MyKhel pic.twitter.com/pwtDCODxvU
— myKhel.com (@mykhelcom) March 3, 2026
டி20 உலகக் கோப்பை வரலாற்றில், சேஸிங்கின் போது ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை (82*) சஞ்சு முறியடித்துள்ளார். இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, மார்ச் 5-ம் தேதி (நாளை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்துடன் மோதவுள்ளது. சஞ்சுவின் இந்த ஆட்டம் குறித்துக் கேட்டபோது, முன்னாள் கேப்டன் கபில் தேவ், “இது தனிநபருக்கான வெற்றி அல்ல, அணிக்கான வெற்றி. ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
