
பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படு தோல்வி அடைந்ததாக கூறிய முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. திமுக இதுவரை ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடையும் என்று விமர்சித்துள்ள பாஜக தமிழக வளர்ச்சிக்கு மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பே காரணம் என்றும் தெரிவித்துள்ளது.