திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கணேசன் என்பவரின் 90-வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு 500 கிலோ மட்டன் பிரியாணி, 200 கிலோ சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா என கறிவிருந்து பரிமாறப்பட்டுள்ளது
இந்த நிலையில் கணேசனுக்கு புத்தாடை அணிவித்து, குதிரை வண்டியில், மேளதாளங்கள் முழங்க, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி ஊர்வலமாக வரவேற்றனர். மேலும் மறைந்த அவரின் மனைவியே வாழ்த்து சொல்வது போல் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#Watch | pic.twitter.com/XQ6fTrELa7
— Sun News (@sunnewstamil) July 19, 2025
