தெலுங்கானாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், மருத்துவமனையின் தரையில் அமர்ந்திருந்த வயதான கணவன், தனது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியின் தலைமுடியை ஒழுங்காக வாரி, மெதுவாக கட்டிவைத்ததை பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மக்பூப்நகர் அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS இறுதி ஆண்டு படித்து வரும் அபிநவ் சந்துலா, இந்த உருக்கமான தருணத்தை தனது X  பக்கத்தில் பகிர்ந்து, “உண்மையான அன்பு வார்த்தைகளில் கிடையாது, அது மருத்துவமனை வார்டுகளில், வேதனைக்குள் கை பிடித்து இருக்கும் உறவில் உள்ளது” என்று பதிவிட்டார்.

இந்த மனதை உருக்கிவைக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி, பலரது மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வயதான கணவன், அன்பு மற்றும் பொறுமையுடன் மனைவியின் தலைமுடியை சீவி, மெதுவாக பின்ன, அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். சொல்ல முடியாத உணர்வுகளை, செயல் மூலமாக வெளிப்படுத்தும் காதல் என்பது இந்த வீடியோ மூலம் பலருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பலரும் “இது காதலின் தூய்மையான வடிவம்” எனக் கூறி இந்த ஜோடியின் உறவை பாராட்டியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Abhinav Sandula (@uneek.wrld)