கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆஞ்சநேயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் வீட்டில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்காக மின் மோட்டாரை போட்டுவிட்டு ஆஞ்சநேயாவின் மனைவி வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மஞ்சு மோட்டார் அருகே சென்று வயரை பிடித்து இழுத்து விட்டான்.

இதில் மின்சார பாய்ந்த நிலையில் குழந்தை தூக்கி வீசப்பட்டான். இதில் மஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு தாய் வெளியே வந்து  பார்த்தபோது மகன் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி துடித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை கொண்டு வருகிறார்கள்.