தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) சார்பில் போட்டியிட்ட ஆர். விஜய் சரவணன் அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்த அவர், இறுதிக்கட்ட சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிக் கனியை எட்டியுள்ளார்.
தஞ்சை மண்ணில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, தவெக-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக விஜய் சரவணன் உருவெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.
