விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சபரீஷ்(11). இந்த சிறுவன் கடந்த 14ஆம் தேதி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சபரீஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சபரிஷ் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சபரீஷின் தந்தை சரவணன் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் நான்கு பேர் பயன் அடைந்தனர்.