தமிழகம் முழுவதும் தக்காளி உட்பட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை அனைத்துமே உச்சம் தொட்டுள்ளது. தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

அதனைப் போலவே பெரிய வெங்காயம் 25 ரூபாய், உருளைக்கிழங்கு 35 ரூபாய், கேரட் அறுபது ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் வெண்டைக்காய் ஆகியவை 45 ரூபாய், முட்டைக்கோஸ் 25 ரூபாய், பாகற்காய் 65 ரூபாய், சுரக்காய் வெள்ளரிக்காய் 35 ரூபாய், பச்சை மிளகாய் 80 ரூபாய், அவரைக்காய் 70 ரூபாய், பட்டாணி 190 ரூபாய், இஞ்சி 200 ரூபாய், பூண்டு 140 ரூபாய் மற்றும் சின்ன வெங்காயம் 90 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அரிசி, பருப்பு மற்றும் பயிறு உள்ளிட்ட பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.துவரம் பருப்பு ரூ.118-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. பாசிப்பருப்பு ரூ.135-ல் இருந்து ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், அரசி, சிறு தானியங்கள், மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.