அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொலை செய்ய ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதி தாவூத் அல் சாதி சதித்திட்டம் தீட்டியிருந்தது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானிய தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், அவரது தீவிர ஆதரவாளரான அல் சாதி இக்கொலைச் சதிக்குத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவான்காவின் புளோரிடா இல்லத்தின் வரைபடத்தை வைத்திருந்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஈரானின் மற்றும் கதாயிப் ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த அல் சாதி, சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு இவான்காவைக் குறிவைத்து இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இதனால் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளின் நீண்டகால கண்காணிப்பில் இருந்த இவன், அமெரிக்காவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலும் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சதித்திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.