சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கடைக்காரர் ஒருவர் தனது கடையில் விற்கும் வாட்டர் புரூஃப் ஜாக்கெட்டின் தரத்தை நிரூபிக்க கையாண்ட விசித்திரமான முறை பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. பொதுவாக ஒரு துணி தண்ணீரை எதிர்க்கும் என்பதை நிரூபிக்க அதன் மீது சிறிதளவு தண்ணீரை ஊற்றிக் காட்டுவார்கள்.

ஆனால், இந்த கடைக்காரரோ வாடிக்கையாளர் ஒருவரை அந்த ஜாக்கெட்டை அணியச் சொல்லி, அவர் மீது சரமாரியாக தண்ணீரை ஊற்றியது மட்டுமின்றி, ஜாக்கெட்டின் வலிமையை சோதிக்க அவரை பிடித்து இழுத்து அலைக்கழிக்கும் காட்சிகள் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “விளம்பரத்திற்காக இப்படியா செய்வார்கள்?” என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர். ஜாக்கெட் நனையவில்லை என்பது உண்மையாக இருந்தாலும், அந்த வாடிக்கையாளர் பட்ட அவதிதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டிவி9 பாரத்வர்ஷ் வாயிலாக வைரலாகியுள்ள இந்த வீடியோ, “வியாபாரத்திற்காக கடைக்காரர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. வெறும் ஜாக்கெட்டின் தரத்தை காட்ட இவ்வளவு களேபரங்கள் தேவையா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.