வங்கதேசத்தில் ஹிந்து காவல்துறை அதிகாரி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்நாட்டு மாணவர் தலைவர் ஒருவர் அளித்துள்ள அதிரடி வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹபிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு ஹிந்து போலீஸ் அதிகாரியைத் தான் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போராட்டங்களின் பெயரால் அரங்கேற்றப்பட்ட இத்தகைய கொடூரமான வன்முறைச் செயல்கள் சர்வதேச அளவில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

மேலும் மாணவர் போராட்டம் என்ற போர்வையில் மத ரீதியான வெறுப்புணர்வு தூண்டப்பட்டு, அப்பாவி அரசு அதிகாரிகள் இலக்கு வைக்கப்படுவது பெரும் கவலையை அளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர் நீதி கோரி வரும் நிலையில், இந்த வாக்குமூலம் அந்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.