சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், ஒரு பெண் தனது குழந்தைகளை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். தன் மகளை முன்புறமும், மகனை பின்னால் உட்கார வைத்தும் கூட்டிச் செல்கிறார். ஓடிக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவன் மிகுந்த ஈடுபாட்டுடன் தேர்வுக்கு தயாராகி வருகிறான்.

ஸ்கூட்டி சீட்டில் புத்தகங்களை வைத்து எழுதிக்கொண்டே செல்லும் காட்சியை பின்னால் சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த சிறுவனின் படிப்பின் மீதான ஈடுபாடு அனைவரையும் கவனம் ஈர்க்கச் செய்துள்ளது.