
பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் சிறுவன் ஒருவன் அசால்டாக பாம்பை பிடித்துக் கொண்டு விளையாடுகிறான். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ பார்த்து பலரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். காரணம் நான்கு வயது சிறுவன் ஒருவன் அசால்டாக பாம்பை பிடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது. கண்ணில் சிறிதளவு பயம் இல்லாமல் பாம்போடு விளையாடிக் கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். பலரும் பயத்தோடு பார்த்தாலும் சிறுவனின் பாதுகாப்பு மிக முக்கியம் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram