பொதுவாக நாம் வாடகை வீட்டிற்கு செல்வதற்கு முன்னால் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அனைவருக்குமே சொந்த வீடு இருக்காது. பெரும்பாலும் நகரங்களில் இருப்பவர்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். வாடகை ஒப்பந்தம் என்பது வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு முக்கியமான ஆவணம் ஆகும் இந்த ஒப்பந்தத்தில் வீட்டு வாடகை தொகை மற்றும் வீடு தொடர்பான விஷயங்கள் இருக்கும். இதில் நில உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர், சாட்சிகளின் கையொப்பம் இருக்கும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்போது சில விஷயங்களை சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் ஒவ்வொரு மாதமும் வீட்டு உரிமையாளருக்கு எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வருடமும் 10% வாடகை அதிகரிக்கிறது. விரும்பினால் நீங்கள் இதை ஒத்துக் கொள்ளலாம். அல்லது வாடகை சிறிது குறைக்குமாறு வீட்டு ஓனரிடம் கேட்கலாம். வாடகை பணத்தை தாமதமாக கொடுப்பதற்கு வீட்டின் ஓனர் ஏதேனும் அபராதம் வசூலிப்பாரா? என்று தெரிந்து கொள்ள வேண்டும் அது மட்டும் அல்லாமல் மின்சாரம், தண்ணீர் கட்டணம், வீட்டு வரி, நீச்சல் குளம், பார்க்கிங் போன்ற வசதிகளுக்கான கட்டணத்தையும் சரிபார்க்க வேண்டும்.

அதாவது வீட்டு உரிமையாளருக்கு செலுத்தும் கட்டணத்தை மட்டுமே ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். வீட்டில் வசிக்கும் போது அவ்வப்போது பழுது பராமரிப்பு மற்றும் பெயிண்டிங் தேவைப்படும் அப்படி இருந்தால் அதற்கான செலவு யார் பார்ப்பார்கள் என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அதேபோல சிலிண்டர் விபத்து போல வீட்டுக்கு ஏதாவது சேதம் நடந்தால் வீட்டில் சேதத்தை யார் கொடுப்பார்கள் என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

வீட்டில் குடியிருக்கும் முன்பாக வீட்டு ஓனரிடம் அட்வான்ஸ் தொகையை கொடுப்போம். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அட்வான் தொகையை சரியாக குறிப்பிட வேண்டும். அதை திரும்ப பெறுவதற்கான விதிகளையும் எழுத வேண்டும். கையொப்பமிட்ட பிறகு வாடகை ஒப்பந்தத்தின் ஜெராக்ஸ் எடுத்து நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.