
தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றார்.
திருக்குவளையில் 25ம் தேதி காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கும் நிலையில் 26 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் 27ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் சென்னை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது