மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள். நான் இந்த இயக்கத்திலே 1972ல் இருந்து இருக்கிறேன். எத்தனையோ மாநாடுகளை பார்த்திருக்கிறேன் எழுச்சி மிகுந்த இந்த மாநாட்டை போல ஒரு மாநாடு என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை.

அந்த அளவிற்கு சிறப்பான மாநாடாக நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மண் பல்வேறு மாநாடுகளை பார்த்திருக்கிறது. ஏன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாநாடு நடத்தி காட்டி இருக்கிறார்.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாநாடு நடத்தி காட்டி இருக்கிறார்கள். இன்றைக்கு அவருடைய தொண்டன் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவினுடைய தொண்டன் இபிஎஸ் அவர்கள் இன்றைக்கு இந்த சிறப்பு மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சிறப்பான இந்த மாநாடு ஒரு எழுச்சி மிகுந்த மாநாடாக காட்சியளிக்கிறது. ஈபிஎஸ் அவர்களும் நானும் அம்மா அவர்களுக்கு இக்கட்டான சூழல் இருந்த நேரத்திலே ஒன்றாக இருந்திருக்கிறோம்.   திமுகவிற்கு ஒரு செயலை செய்வது என்றால் நேர்மையாக செய்ய தெரியாது ? குறுக்கு வழியிலே தான் செய்வார்கள். 2017 சட்டமன்றத்திலே ஒரு அமளி நடைபெற்றது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தது.

ஈபிஎஸ் அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது சட்டமன்றத்திலே பல்வேறு ரகளை ஈடுபட்டார்கள். என்னுடைய சட்டை எல்லாம் கூட கிழித்து அடித்தார்கள். நேர்மையாக அவர்களுக்கு நடக்க தெரியாது.  எடப்பாடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,  நான்கரை ஆண்டு காலம் ஒரு நல்லாட்சியை தமிழகத்தில் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்தது மட்டுமல்ல,  தொண்டர்களை வழி நடத்தி அன்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.