முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது,புன்னகை மன்னன், பூவிழி கண்ணன்,  நம் மன்னன் நாளைய முதல்வர், கழகப் பொதுச் செயலாளர்,  முன்னாள் முதலமைச்சர்,  மக்களின் முதல்வர்,  மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்,  வருங்கால தமிழகத்தினுடைய நிரந்தர முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்.

மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் இடவேண்டும்,  மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று சொன்னவன் நம் தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மலை பெயர்ந்தாலும்,  நிலைகுலையாத மாணிக்க தலைவி நம் தங்கத்தாய் ஒன்றரை கோடி தொண்டர்களை தன்னுடைய உயிராக – உறவாக நினைத்த,  நம் தமிழ் மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட நம் இதய தெய்வம் அம்மா இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக இன்றைக்கு கழகத்திற்கு கிடைத்திருக்கிற அருமருந்து தான் நம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்.

இரண்டு நிமிடத்தில் சொல்லிவிடுகிறேன். இந்த இடம் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு.  காலையில் மாவட்டத்தின் சார்பாக வைரவேல் கொடுத்தோம். வைரவேலை எதற்காக கொடுத்தோம் தெரியுமா ? பொம்மை முதலமைச்சர், கொடுங்கோலர் திமுக ஆட்சியை சம்ஹாரம் பண்ண போற… நம்முடைய முருகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பழனிச்சாமி. ஒரு சாமி, இரு சாமி அல்ல ஆறுச்சாமி. அடக்கத்தின் மறுபடிவமாக இருக்கின்ற நம் அண்ணன் என தெரிவித்தார்.