
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த ஒரு ஆசாமியின் செயல் வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரையன் என்பவர், கோவில்பட்டியில் தனது வேலைகளை முடித்துவிட்டு, பஸ் மூலம் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் மதுபோதையில் இருந்ததால், கரிசல்குளம் பகுதியில் இறங்கி விட்டார். பின்னர், நடுரோட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு செல்போன் பார்க்க தொடங்கினார். இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
வாகன ஓட்டிகள் அவரிடம் “நடுரோட்டில் படுத்துக் கொண்டு ஏன் அலப்பறை செய்கிறாய்?” என்று கேட்டபோது, “டென்ஷன் தான், அதனால் ரோட்டில் படுத்திருக்கிறேன்” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. சிலர் அவரை எச்சரித்து, “இப்படி ரோட்டில் படுத்தால், வாகனம் மேலே ஏறிவிடும்” என கூறியும், அவர் “என் மேலே வாகனம் ஏற்ற யாருக்கு தைரியம் இருக்கிறது?” எனத் திமிராக பதிலளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சில நல்ல உள்ளங்கள், அவரை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர வைத்து, வாகன ஓட்டிகளின் சிரமத்தைத் தவிர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.