சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் லட்சுமணன் (42) என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆலச்சம்பாளையம் என்னும் பகுதியில் பேக்கரி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக ரவி (37) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் சம்பவ நாளன்று விசைத்தறி தொழிலாளி ஒருவர் பேக்கரிக்கு டீ குடிக்க வந்துள்ளார்.

அப்போது அவரது டீயில் சக்கரை குறைவாக இருந்தது. இதனால் டீ மாஸ்டரிடம் கூடுதலாக சர்க்கரை போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின் தகராறு முற்றியது. இதில் விசைத்தறி தொழிலாளியின் மீது டீ கொட்டியது. இதனால் கோபமடைந்த அவர் அருகிலுள்ளவர்களின் உதவியுடன் கடையை அடித்து நொறுக்கினார்.

இந்த சம்பவத்தால் டீ மாஸ்டர் மற்றும் விசைத்தறி தொழிலாளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ளவர்கள் இவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.