
சசிகலா, சமீபத்திய மழை நீர் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் சசிகலா, தற்போது நடந்த அரசியல் சூழ்நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்காலிகமாக இருக்கும் அரசு மக்களுக்காக இருக்கிறதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது உள்ள ஆட்சி, தலைவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவே செயல்பட்டு வருகிறது என்றார். இதைத் தொடர்ந்து, அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வேண்டுமென்றால், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உண்மையை அவர்கள் மறந்து போயிருக்கிறார்கள்.
சென்னையில் மழையினால் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய இன்னும் பல முயற்சிகளை திமுக மேற்கொள்ள வேண்டும். சும்மா டீக்கடையில் உட்கார்ந்து முதல்வர் ஸ்டாலின் டீ குடிப்பதாலோ அல்லது மைக்கை பிடித்துக் கொண்டு பேசுவதால எதுவும் மாறிவிடாது. திமுக அரசு சென்னைக்காக பல்லாயிரம் கோடி செலவு செய்துள்ளனர் என்று கூறும் போது அப்படி உண்மையிலேயே செலவு செய்திருந்தால் எப்படி சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பார்கள்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக இல்லை. சென்னை முழுவதும் 98 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து இருந்தால் எப்படி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும். அமைச்சர்கள் பொய் சொல்ல தயங்காமல் பல நேரங்களில் சரளமாக பொய் பேசுகிறார்கள். இதை அனைத்தையும் தமிழக மக்கள் அறிவார்கள். மேலும் திமுகவின் ஒரே முக்கிய நோக்கம் கலைஞர் நூற்றாண்டு என்ற பெயரில் கல்வெட்டுகளை பொறிப்பது மட்டும்தான் என்று கூறினார்.