மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் பாலவி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். எட்டு பெண்கள் இந்த சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில் நான்கு பெண்களுக்கு சிகிச்சை முடித்த மருத்துவர் டீ வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு டீ கொடுக்கப்படாததால் அறுவை சிகிச்சை அறையில் இருந்து அந்த மருத்துவர் வெளியேறி விட்டார்.

மீதம் இருந்த நான்கு பெண்களுக்கும் ஏற்கனவே அனஸ்திசியா கொடுத்து அவர்கள் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு மருத்துவரை வரவழைத்து அந்த பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவர் பாலவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.