பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தனது காதலி சம்ரின் கௌருடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்ததோடு, அர்ஷ்தீப் சிங் தனது காதலியை பஞ்சாப் அணியின் வீரர்கள் செல்லும் பேருந்திலேயே அழைத்துச் சென்றது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது” டீம் பஸ்ஸை லவ் எக்ஸ்பிரஸ்ஸா மாத்திட்டீங்க?” என்று கிண்டல் செய்து அர்ஷ்தீப்பை வறுத்து எடுத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுபோன்ற விஷயங்களில் தலையிட வேண்டும் என்றும், வீரர்கள் தங்கள் காதலி அல்லது நண்பர்களுடன் டீம் பஸ்ஸில் பயணிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
<a href="http://

“>

ஏற்கனவே ஹர்திக் பாண்டியா இதுபோன்று தனது தோழியுடன் சுற்றி வருவதால் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இப்போது அர்ஷ்தீப் சிங்கும் சிக்கியுள்ளார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தாலும், மைதானத்திற்கு வெளியே அர்ஷ்தீப் காட்டும் இந்த அதீத ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.