தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை ஒரு முறை கூட பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது கிடையாது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க விஜய்க்கு தைரியம் கிடையாது என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இருப்பினும் இதற்கான காரணம் குறித்து ஒரு முறை கூட விஜய் வாய் திறக்காத நிலையில் இதற்கான பதிலை தற்போது அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கூறியுள்ளார். இது பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, பத்திரிக்கையாளர்களை சந்திக்கணும் பிரஸ்மீட் வைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு ரூல் இருக்கிறதா.? அதை விடுங்க விஜய் இதுவரை விளம்பரமே செய்யவில்லையே அது ஏன் என்று யாராவது கேட்கிறீர்களா.? சோசியல் மீடியாவாக இருக்கட்டும் தொலைக்காட்சியாக இருக்கட்டும் நான் எதை பார்த்தாலும் ஸ்டாலின் வெல்லட்டும் தமிழ்நாடு தொடரட்டும் என்ற விளம்பரங்கள் வருகிறது.

நீங்கள் ஜெயித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்கு இப்படி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் செய்ய வேண்டும். விஜய்க்கு பயம் கிடையாது அதனால்தான் அவர் விளம்பரம் செய்யவில்லை என்றார். அதற்கு உடனடியாக பேட்டி எடுத்தவர் எங்கு பார்த்தாலும் விஜய் தானே இருக்கிறார் இதற்கு ஏன் தனியாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

உடனடியாக சிரித்த அவர் பின்னர் விஜய் தனியாக அரசியலுக்கு வந்துள்ளாரே ஜெயித்து விடுவாரா என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கூறுவது ஒரே ஒரு பதில் தான் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் தனியாக அரசியலுக்கு வந்துள்ளார். நீங்கள் தோற்று விடுவீர்கள் என்ற பயத்தால்தான் 30 பேருடன் சேர்ந்து இருக்கிறீர்கள். மேலும் அவர் பயப்படாமல் தனியாக களமிறங்கியபோதே ஜெயித்துவிட்டார் என்றார்.

“>