அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களுக்குக் கப்பல்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட முழுமையான தடை இன்னும் அமலில் இருப்பதாக ஈரான் ராணுவம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்திருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்று ஈரான் சாடியுள்ளது.
டிரம்ப் சொன்ன அந்தத் தவறான தகவலை நம்பி, ஈரானின் தடையை மீறி நீரிணையைக் கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளதாக ஈரான் ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். தங்களின் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணை வழியாக நுழைய முயலும் எந்தவொரு கப்பலும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் போன்ற தலைவர்களின் பேச்சை நம்பி கப்பல் நிறுவனங்கள் ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றும், தடையை மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஈரான் விடுத்துள்ள இந்த வார்னிங் உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
