இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மாற்று சாணம் ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டு செல்கிறது. பல நாடுகளிக் மாட்டு சாணத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர். இதனால் உலக அளவில் மாட்டு சாணத்திற்காக தேவை அதிகரித்துள்ளது.

இந்தியா அதிக கால்நடைகளை கொண்ட நாடு. இங்கிருந்து மாட்டு சாணம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து வணிக ஆலோசகர் சர்தக் கூறும்போது, உலகில் பசுவின் சாணத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. ரூபாய் 400 கோடி மதிப்புள்ள பசுவின் சாணத்தை இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

பனை மரங்களை வளர்க்க மேற்காசிய நாடுகள் பசுவின் சாணப்பொடியை உபயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது. மாட்டு சாணம் இந்தியாவிலேயே பல வகைகளில் உபயோகப்படுகிறது. விவசாயத்தில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை எரிவாயு தயாரிக்கவும் மாட்டு சானத்தை பயன்படுத்துகின்றனர். அது மட்டும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பல்வேறு பொருட்கள் மாட்டு சாணத்தில் இருந்து வருகிறது.