
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்ததை சுட்டிக்காட்டி அக்கட்சியை ஓபிஎஸ் உரிமை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என்று பேசினார். ஆனால் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. இதை சுட்டிக்காட்டி அதிமுக விவகாரத்தில் டிடிவி தினகரனை ஆதரிக்கவும், ஓபிஎஸ்-க்கு குட்பை சொல்லவும் பாஜக முடிவு எடுத்து விட்டதாக மக்கள் பேசி வருகின்றனர்.