பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி காட்டியுள்ளார். அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது டிடிஎஃப் வாசல் விபத்தில் சிக்கிய நிலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அவரது ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.