வரும் டிசம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எந்தெந்த நாட்களில் வங்கிகள்  இயங்காது என்பது குறித்து பார்க்கலாம். வங்கி விடுமுறை குறித்து நம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய பணபரிவர்த்தனையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அந்த வகையில் டிசம்பர் 9 மற்றும் 23 இரண்டு நாட்கள் விடுமுறை. அதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 1 மாநில தொடக்க நாள் காரணமாக அருணாச்சல பிரதேசம், நாகலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 4 புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா

டிசம்பர் 12 – பா டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 13 – லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 14 – லோசுங்/நாம்சுங் காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 19 – விடுதலை தினத்தையொட்டி கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

டிசம்பர் 26 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது.

டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் காரணமாக நாகாலாந்தில் வங்கிகளுக்கு விடுமுறை.

டிசம்பர் 30 – உ கியாங் நங்பாவைக் கருத்தில் கொண்டு மேகாலயாவில் வங்கிகள் திறக்கப்படாது.