தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வில் முறைகேடுகள் நடைபெறாத விதமாக இரு பகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையின்படி நடைபெற்றது. விடைத்தாள்கள் தற்போது தனித்தனியாக இரு முறை ஸ்கேன் செய்து பிழை ஏதும் இருப்பின் அவை கணினி மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அதன் பிறகு அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்.

தற்போது 36 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்களை சரி பார்க்க வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு பணி தேர்வுகள் மற்றும் துறை தேர்வுகளை நடத்தி இதற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்ட வருவதால் குரூப் ஃபோர் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் எவ்வித தவறும் இல்லாமல் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தேர்வர்கள் குரூப் 4 தேர்வு குறித்து வெளியாகும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது