திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக தலைமையிலான கூட்டணியை “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று கடுமையாக விமர்சித்தார். “கூட்டணிக் கணக்குகளைப் போட்டு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என நினைப்பவர்களின் கனவு இனி பலிக்காது. மக்கள் ஏற்கனவே திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்று அவர் ஆவேசமாக முழங்கினார்.
மேலும், திமுக கூட்டணியைக் கிண்டல் செய்த அவர், “கொள்ளையடித்த பணத்தை வைத்து அமைக்கப்பட்ட அந்தக் கூட்டணி இப்போது டாப்பு தனியா, பாட்டம் தனியா என்று உடைந்து கிடக்கிறது. அதைப் பிரித்து மேய்ந்து மக்கள் மண்ணுக்குள் புதைத்துவிட்டார்கள்” என்று பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த அதிரடி விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
