தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தி மக்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற தகுதி உள்ளவர்களின் பட்டியலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை ஆயிரம் ரூபாய் உரிமை தொகைக்கான முகாம்களை நடத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்லலாம். விண்ணப்பங்களை பதிவு செய்ய 10 முதல் 12 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தகவல் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என அரசு தெரிவித்துள்ளது.