1989 ஆம் வருடம் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சசர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்கப்பட்டதாக மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு வைத்தார். இந்நிலையில் இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்து பேசுவார், ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை.
சட்டமன்றத்தில் அப்படி செய்ய வேண்டும் என தனது வீட்டில் அவர் ஒத்திகை பார்த்தார். நான் உடனிருந்தேன் என அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசு அவையில் பேசியது இன்றும் குறிப்பில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
