
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனங்களோடு தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய்யின் மகன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகனாக மாறிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் விஜய்யும் அவரின் மூன்று வயது மகன் துருவாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது அவர் தலைவா தலைவா என்று துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Director #Vijay son 3 year old #Dhruvvaa after watching #Jailer #Rajinism forever 🙏 #ThalaivarNirandharam #Rajinified@rajinikanth @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial @iamvasanthravi @donechannel1 pic.twitter.com/AuGZXG9qdy
— Ramesh Bala (@rameshlaus) August 10, 2023