தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்ஸ் உடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது SK 21 படத்திற்காக குறுகிய காலத்தில் கொண்டுவரப்பட்ட உடற்கட்டு என கூறப்படுகின்றது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வரும் நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.