
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.