வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலை ரூபாய் 50 அதிகரித்த நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஜூன் மாதத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும் மின்சார வாகனங்களுக்கு ஜூன் மாதத்தில் கிலோ வாட்டுக்கு மானிய தொகை ரூபாய் ஐந்தாயிரம் குறைத்து பத்தாயிரம் ஆக ஜூன் 1 ஆம் தேதி முதல் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 1 ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டிகளின் விலையானது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பிஎன்ஜி -சிஎன்ஜி எரிவாயு விலையிலும் சிறிய மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.