பொதுத்துறை, தனியார் என பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருசில வங்கிகள் Domestically systematically important banks)-D-SIBs, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. உள் நாட்டு அமைப்பு ரீதியாக மிகவும் முக்கிய வங்கிகளாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகிய 3 இடம்பெற்றிருக்கிறது.

D-SIBs என சுருக்கமாகக் கூறப்படும் இப்பட்டியலில் கடந்த 2015-ம் வருடம் எஸ்பிஐ வங்கியும், 2016-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியும், 2017-ம் ஆண்டு ஹெச்டிஎப்சி வங்கியும் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு வங்கிகள் என்பதால் D-domestic எனும் குறியீட்டோடு இவை அழைக்கப்படுகிறது. இதே வெளிநாட்டு வங்கிகள் நம் நாட்டில் பிரதானமாக செயல்பட்டு வந்தால் அவை G-global என்ற குறியீட்டோடு G-SIB என கூறப்படும்.

D-SIB என பட்டியலிடப்படும் வங்கிகளை கையாள்வதற்கான கட்டமைப்பு மற்றும் வெவ்வேறு அளவு கோல்கள் ஜூலை மாதம் 2014-ம் வருடத்தில் வெளியாகியது. அதன்பிறகு ரிசர்வ் வங்கி, எந்தெந்த வங்கிகளை D-SIB வங்கிகளாக நியமிக்கிறதோ அதன் பெயர்களை வெளியிடவேண்டும். நம் நாட்டில் உலகளாவிய அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கியாக ஒரு வங்கி குறிப்பிட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தால் அவை, G-SIB என்று குறிப்பிடப்படும். அவ்வாறு tag செய்யப்படும் வங்கிகள் CET-1 எனும் அளவீட்டின் கீழ், இந்தியாவில் கூடுதலாக மூலதனத்தை கொண்டிருக்கவேண்டும்.