இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று பல தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக வருகின்ற 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பை டன் அவர்கள் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜோ பைடனுக்கு  கொரோனா தொற்று நெகடிவ் என வந்திருந்தாலும் அவருக்கும் தினம் தோறும் பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜோ பைடன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து ஜோ பை டன் அவர்களுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்துள்ளதால் திட்டமிட்டபடி நாளை அவர் இந்தியா வர இருப்பதாகவும் அப்போது பிரதமரை சந்தித்து இருநாட்டின் நட்புறவு உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.