ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு  பெரிய அளவில் உதவி புரிந்து வருகின்றன. அதேபோன்று ரஷ்யாவிற்கு சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் உதவி செய்கிறது. ஆனால் இந்த உதவி குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அமெரிக்கா இந்த மூன்று நாடுகளுக்கும் தங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதனிடையே வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரி கூறுகையில் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்கும் பட்சத்தில் அதற்கான விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.