உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்டதாகும். இந்த சீன பெருஞ்சுவரானது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக 1987 ஆம் வருடம் யுனெஸ்கோவால் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு இடத்தில் இடைவெளி தென்பட்டுள்ளது இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் மர்ம நபர்கள் சிலர் சுவற்றை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த வழியாக கடந்து செல்வதற்காக இந்த சம்பவத்தை ஒரு ஆணும் பெண்ணும் செய்துள்ளதாகவும் அந்த சேதம் சரி செய்ய முடியாத அளவிற்கு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.