உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு வந்த பெண்களை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிம் உரிமையாளரான அக்ரம் மற்றும் அவரது சகோதரர் ஆலம் ஆகியோர், பெண்களுக்கு விரைவாக எடையை குறைக்க உதவும் ‘ப்ரீ-ஒொர்க்அவுட் டிரிங்க்’ என கூறி மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்துள்ளனர்.
மேலும் பெண்கள் மயக்கமடைந்த பிறகு, அவர்களை ஜிம்மில் உள்ள ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அந்த கொடூரத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை காட்டி பெண்களை மிரட்டிய அந்த கும்பல், பல லட்சம் ரூபாய் கேட்டு பிளாக்மெயில் செய்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் ஜிம்மில் சோதனை நடத்தி போதை ஊசிகள், மருந்துகள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் அக்ரம் மற்றும் ஆலம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
