ஆஷஸ் தொடரில் (Ashes Test) இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (Joe Root) தனதுக் கிரிக்கெட் வாழ்க்கையின் 40வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் (Matthew Hayden) பெரும் நிம்மதி அடைந்தார்.
🤳 (1) 𝗜𝗻𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 𝗺𝗲𝘀𝘀𝗮𝗴𝗲@HaydosTweets has something he’d like to say to Joe Root 😅 pic.twitter.com/0yPGk7JC5S
— England Cricket (@englandcricket) December 4, 2025
தற்போது நடந்து வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிக்கத் தவறினால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைச் (MCG) சுற்றி நிர்வாணமாக ஓடப் போவதாக மேத்யூ ஹேடன் சவால் விடுத்திருந்தார்.
Let’s cross LIVE to Matthew Hayden after Joe Root’s century…
😂 #Ashes pic.twitter.com/4Wnnp5vsMN
— 7Cricket (@7Cricket) December 4, 2025
இந்தச் சவால் ரூட் சதம் அடித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. ரூட்டின் சதம் குறித்துப் பேசிய ஹேடன், “வாழ்த்துகள் ஜோ! என் மானத்தைக் காப்பாற்ற உனக்கு இவ்வளவு நேரம் பிடித்ததா? பத்து அரைச்சதங்களுக்குப் பிறகு இறுதியாக ஒரு சதம்! மிகவும் சிறப்பான ஆட்டம்” என்று நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
