பரபரப்பான சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு, சற்றும் எதிர்பாராத விதமாக மரண பயம் காட்டிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு டிராக்டர், திடீரென அதிவேகமாக பின்னோக்கி (Reverse) சீறிப்பாய்ந்து வந்தது. அந்தப் பெண்மணி சுதாரிப்பதற்குள் அந்த ராட்சத சக்கரம் ஸ்கூட்டியை உரசுவது போல் வந்து நின்றது. ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிர் ஊசலாடி இருக்கும் என்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

​இந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் எக்ஸ் (X) மற்றும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “நிச்சயமாக இது அந்தப் பெண்ணிற்கு மறுபிறவி தான்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கனரக வாகன ஓட்டிகளின் இத்தகைய கவனக்குறைவான செயல்கள் பெரும் விபத்துகளை விளைவிக்கும் என மக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். “ஜஸ்ட் மிஸ்… இல்லன்னா அவ்வளவுதான்” என அந்தப் பெண்ணின் நிலையை எண்ணி இணையவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.