ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்து 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சொத்து வரி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, சொத்து வரி வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.

குடியிருப்பு சொத்து, குடியிருப்பு அல்லாத நிலம் இரண்டும் சொத்து வரி வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளன. வரி கட்டமைப்பின் முதல் தொகுதி ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். இவை 31 மார்ச் 2026 வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.