சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் புதுப்பித்தல் பணிகளை முடிக்க வேண்டும். மாநிலத்தில் சுமார் 76 லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனரகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த பணியை விரைந்து முடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்தியோதயா மற்றும் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள், ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு புதுப்பிப்பு இலவசம் எனவும் அரசு தெரிவித்துள்ளது