இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் சனி ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் பொருந்தும். ஆனால் சில மாநிலங்களில் பண்டிகை நாட்களை பொறுத்து விடுமுறை மாறுபடலாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகள் மூடப்படும் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் விடுமுறையின் அடிப்படையில் வங்கி வேலை நேரத்தில் மாற்றங்கள் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினம், சனி ஞாயிறு என 11 நாட்கள் ஜனவரி மாதம் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.