ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் 28 முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி, தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் பங்கேற்றார்.

அப்போது நெட் பிராக்டிஸின் போது, 14 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜடேஜாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான ஜடேஜாவை இந்த சிறுவன் திணறடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜடேஜா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார்.

“>

 

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் இப்போது சிஎஸ்கே அணிக்குச் சென்றுவிட்டதால், அவர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.